மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் ஒதுக்குப்புறத்தில் கடை நடத்தி வரும் 50-க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளிடம் தினசரி பிரச்சனை செய்து வரும் முட்டை கடை நடத்தி வரும் அன்பழகன் மற்றும் கணேசன்
மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையாளர் சித்ரா விஜயன் அவர்களின் உத்தரவு பேரில் 50க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒதுக்குப்புறத்தில் கடையை ஒதுக்கி வாழ்வாதாரத்தை காப்பாற்றினார்
50க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகள் பல பேருக்கு கணவரும் கிடையாது சில பேருக்கு மகன்கள் ,மகள்கள் கிடையாது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து போராடிவரும் பெண் வியாபாரிகளிடம் தினசரி தகராறில் ஈடுபடும் முட்டை கடை நடத்தி வரும் அன்பழகன் மற்றும் கணேசன் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்தும் கணவன் இழந்தும் பிள்ளைகள் இருந்தும் உதவி செய்யாமல் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கும் பெண் வியாபாரியிடம் தொடர்ந்து அத்துமீறலில் தகராறு ஈடுபடும் கணேசன் மற்றும் அன்பழகன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று பெண் வியாபாரிகளிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி
