தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவேரி நகரை சேர்ந்தவர் அக்பர் அலி மகன் அஷ்ரப் . அஷ்ரப் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஸ்டோனோ டைப்பிஸ்டாக தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து அரசு பணிக்கு தேர்வானார். முதலிடம் பிடித்து தேர்வான இளைஞர் அஷ்ரப்பை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு ஊக்கத்தொகை வழங்கினார். அப்போது சங்கரன்கோவில் நகர திமுக செயலாளர் பிரகாஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், மாவட்ட நிர்வாகிகள் செய்யது அலி, அப்பாஸ் அலி, அன்சாரி, நிர்வாகிகள் அப்துல் காதர், ஹசன், சேக் , முபின், ராஜா, அபூபக்கர், மைதீன் பட்டாணி, யாசர், பாதுஷா, ரபிக், அலி, சாகுல் ஹமீது உள்பட பலர் இருந்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்.