ரேவதி அவர்கள் தற்போது கோவை சரவணம்பட்டியில் வசித்து வருகிறார்.
இளம் வயதில் திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நிலையில் தனது கணவரை தன்னுடைய 21 வயதில் இழந்திருக்கிறார்.
தன்னுடைய கணவரின் சிகிச்சைக்காக முதல் முறையாக இரத்த கொடுத்த இவர் இன்று வரை 67 முறை இரத்த தானம் செய்திருக்கிறார்.
மிக அவசியமான நேரங்களில் குழந்தைகள் முதல் முதியவர்களின் உயிரை காப்பாற்ற உதவியிருக்கிறார்.
கணவரை இழந்த பெண்கள் 20 பேர் சேர்ந்து ஒரு குழுவாக சில ஆண்டுகள் முன்பு வரை இரத்த தானம் செய்து வந்துள்ளனர்.
தற்போது 59 வயதான இவர் கடந்த ஒன்றரை மாதம் முன்பு ஒரு மாணவனுக்கு இரத்தம் கொடுத்துள்ளார்.
தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றவும் பொருளாதார தேவைக்காக தான் கற்றுக் கொண்ட கம்பெனி ஆடிட்டிங் தொடர்பான பயிற்சிகளை தாயோ தந்தையோ அல்லது இருவருமே இல்லாத பனிரெண்டாம் வகுப்பு முடித்த பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறார்.
அரசுப் பள்ளிகளுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.
கோவில் மேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எளிய மனிதர்களுக்கு உதவும் திருமதி.ரேவதி அவர்களுக்கு செயல் (ஒரு சமூக செயற்பாட்டு களம்) சார்பில் பாராட்டுகளையும் அவரது சமூக பணிக்கு நமது ஆதரவையும் தெரிவித்தோம்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
