ஆக் 20, கன்னியாகுமரி
மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81வது பிறந்த நாள் நினைவாக கன்னியாகுமரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தா. ஆதிலிங்கபெருமாள், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் என். சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் குறமகள், பிரபா, மேலும் மாவட்ட நிர்வாகிகள் டி. தாமஸ், கிங்ஸ்லின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
