நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக கூடலூர் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள சாலைகளின் நிலையானது நம்மை கற்காலத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய அளவிற்கு இருக்கின்றது.
இது தொடர்பாக பலமுறை புகார்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் நெடுஞ்சாலை துறை எடுப்பதாக இல்லை.
மாறாக சாலைகளை சரி செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை அதில் உள்ள குழிகளை மண்ணைக் கொட்டி நிரப்புவதற்கு மட்டும் தான் எங்களது அதிகாரம் உள்ளது., என்கின்ற அளவில் பொறுப்பில்லாமல் அதிகாரிகள் பதிலளிக்கின்றன.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக பெய்த மழையில் பந்தலூர் பகுதியில் உள்ள தேவகிரி என்கின்ற இடத்தில் சாலை ஓரத்தில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளது.
இது தொடர்பாக முறையிட்டும் நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளவில்லை.
தற்பொழுது தேவாலா ஜி டி ஆர் பள்ளிக்கூடத்தின் அருகில் கூடலூர் செல்லும் சாலையில் உள்ள வளைவின் சாலையின் ஓரம் இரண்டு மோரிகள் உள்ளன அதில் ஒன்று முழுவதுமாக சரிந்து விழுந்துள்ளது இதனால் சாலையின் மேற்புறத்தில் துவாரம் ஏற்பட்டுள்ளது.
இந்த துவாரத்தின் காரணமாக பெரும் விபத்து ஏற்படக்கூடிய அபாயங்கள் உள்ளன உயிரிழப்புகளும் நேர வாய்ப்புள்ளது.
ஆகவே நெடுஞ்சாலைத்துறை எல்லாவித பணிகளிலும் மெத்தன போக்குடனும் அலட்சிய போக்குடனும் நடந்து கொள்வது போல் அல்லாமல் இந்த விடயத்தில் உடனடியாக தீர்வு காண வேண்டும் சாலையை சரி செய்து தர வேண்டும்.
இல்லையேல் மீண்டும் மக்களை திரட்டி கடுமையான போராட்டத்திற்கு முன்வர நேரிடும் என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இராசி இரவிக்குமார் மாவட்ட செயலாளர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI ) நீலகிரி மாவட்டம்.
