திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ளது வரதமா நதி அணை.
இந்த ஆண்டிற்கான பருவ மழை குறுகிய நிலையில் பெய்த காரணத்தினால் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை அப்பகுதி விவசாயிகள் கொண்டு சென்று தற்போது நெல் நடவு செய்துள்ளனர்.
இதனையடுத்து போதிய மழை இல்லாததால் அணை நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயம் இல்லாத பட்டிக்குளம் பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் வரதமாநதி அணை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகளை கேட்காமலேயே அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு பட்டிக்குளம் கொண்டு செல்லப்பட்டன.
தொடர்ந்து மழை இல்லாததால் அணையில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யலாம் என்று திட்டமிட்டு இருந்த நிலையில் அணை நீரை வெளியேற்றதற்கு கண்டனம் தெரிவித்து அணையை முற்றுகையிட்டு வரதமா நதி அணை பாசன விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து ஒரு சிலர் நபரிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலவற்றைப் பெற்றுக் கொண்டு வரதமாநதி அணை விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்தனர்.
தொடர்ந்து வரதமாநிதி அணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் விவசாயிகளை கேட்காமல் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைத்தனர்..
செய்திகளுக்கு : நா.ராஜாமணி – 89733 50663
