புரட்டாசி மாதத்தை ஒட்டி உடுமலை உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது . அதே நேரம் மீன் இறைச்சி, விற்பனை குறைந்துள்ளது.
உடுமலை கபூர் கான் வீதியில் உழவர் சந்தை செயல்படுகிறது இங்கு மொத்தம் 86 கடைகள் உள்ளன. சுற்றுவட்டார பகுதி சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
விலை குறைவு என்பதாலும் தரமாகவும் பசுமையாகவும் இருப்பதால் தினசரி மூன்றாயிரம் முதல் 3500 வரையிலான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
தக்காளி. கத்தரி, வெண்டை ,பீன்ஸ், சுரைக்காய் ,மேராக்காய்,காளிபிளவர் முருங்கைக்காய் பீட்ரூட் கேரட் வெங்காயம், பூண்டு ,இஞ்சி .மிளகாய் .தேங்காய் .மற்றும் கீரை வகைகள் பழ வகைகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. உழவர் சந்தையில் தின சராசரியாக தினசரி 23 டன் அளவுக்கு காய்கறி விற்பனையாகும் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இந்துக்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் அசைவம் சமைக்க மாட்டார்கள் இதனால் காய்கறி விற்பனை அதிகரித்துள்ளது.
இது குறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில் வார நாட்கள் 23 டன் வார இறுதி நாட்களில் 25 டன் காய்கறி விற்பனையாகும் தற்போது புரட்டாசி மாதம் துவங்கியதில் இருந்து தினசரி 30 டன்னுக்கும் அதிகமான காய்கறி விற்பனையாகிறது என்றனர் மேலும் மீன், இறைச்சி ,வியாபாரம் குறைந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
