திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாதேவி குழுமத்தின்
பி.ஆர்.ஜி சிபிஎஸ் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 5500 க்கும் மேற்பட்டோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு நம்மளுடைய பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதமாக மஞ்சுவிரட்டு காளையின் வடத்தைப் பிடித்து உலா வருதல் மற்றும்.கண்ணைக் கட்டி பானை உடைத்தல். சிலம்பம் சுற்றுதல் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து பொங்கல் விழாவில் சிறப்பு நிகழ்வாக மாணவ மாணவியர்கள் ஒன்று கூடி பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து காட்சியளித்தனர். மற்றும் ஓவிய போட்டிகள் பேச்சுப் போட்டிகள் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. பள்ளியின் தாளாளர் ரஞ்சிதா ராமச்சந்திரன். ராஜ்மோகன். கிரிநாத் கலந்து கொண்டனர் மற்றும் இவ்விழாவை பவித்ரா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி நிர்வாகம் பரிசுகள் வழங்கினார்.
பழனி நெய்க்காரப்பட்டி ரேணுகாதேவி பள்ளியில் 5000 மாணவர்கள் பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து பொங்கல் திருவிழா கொண்டாடினர்.
