திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 24 வது வார்டு கண்ணன் நகர் பகுதியில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கி குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது. திமுக நகர மன்ற தலைவர் பொறியாளர் கு. பாப்பு கண்ணன் ME(Str).,LLB., அவர்கள் தலைமையிலும் , திமுக நகரக் கழக செயலாளர் பொறியாளர் சு.முருகானந்தம் BE. முன்னிலையிலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி
குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் கிரிஜா 24 வது நகர மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி ஹரிஹர சுதன் அவர்கள் மருத்துவரணி அமைப்பாளர் ராமதாஸ் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.