வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதில் கட்சிகள் இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமை ஒரு அணியும் நாம் தமிழர் கட்சி எப்பொழுதும் போல மக்களுடன் மட்டும் தான் கூட்டணி என தனித்து நிற்கின்றது இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் கரூர் துயர் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சிபிஐ வளையத்திற்கு கொண்டுவரப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் நடிகர் விஜயின் தமிழகத்துக்கு கழகத்திற்கு ஒரு சின்னங்களில் ஒன்றான விசில் சின்னத்தை நேற்றைய தினம் வழங்கியது குறிப்பிடத்தக்கது
ஒரு கட்சியின் சின்னம் மக்களிடையே சென்றடைய மாதக்கணக்கில் காலம் எடுக்கும். ஆனால், விஜய்யின் ‘விசில்’ சின்னம் சமூக வலைதளங்கள் முதல் கடைக்கோடி கிராமங்கள் வரை பத்தே நிமிடத்தில் நீக்கமற நிறைந்துவிட்டது. இதுதான் நிஜமான ‘விஜய் பவர்’ என்று அவரது தொண்டர்கள் உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி #Whistle , #WhistlePodu போன்ற ஹேஷ்டேக்குகள் டிரண்டில் உள்ளது.
இத்தனை காலமும் விஜய் மக்கள் முன்னால் வரவில்லை, ஊடகங்களை சந்திக்கவில்லை, தெருவில் இறங்கி போராடவில்லை என்று விமர்சனம் செய்தவர்களுக்கு இந்த வரவேற்பு ஒரு தகுந்த பதிலடியாக அமைந்துள்ளது. “அவர் வெளியே வரவேண்டிய அவசியமே இல்லை” என்று தவெகவினர் மிக துணிச்சலாக கூறுகின்றனர். ஒரு தலைவனுக்காக மக்கள் எந்த அளவுக்கு காத்திருக்கிறார்கள் என்பதற்கு, சின்னம் அறிவிக்கப்பட்டவுடன் வீதிகளில் விசில் சத்தம் விண்ணை பிளப்பதே சாட்சியாக உள்ளது. மக்களே ஒரு தலைவருக்காக தாமாக முன்வந்து வீதிக்கு வருவதுதான் உண்மையான அரசியல் எழுச்சி என்பதை இந்த பதிவுகள் உணர்த்துகின்றன.
விசில் என்பது வெறும் சின்னம் மட்டுமல்ல, அது ஒரு மாற்றத்திற்கான அறைகூவல் என்று தவெக தொண்டர்கள் கருதுகின்றனர். விளையாட்டு திடலில் ஆட்டத்தை தொடங்குவதற்கும், ஒரு தவறு நடக்கும்போது அதை சுட்டிக்காட்டுவதற்கும் விசில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல பேருந்து என்பது ஒரு அரசாங்கம் அதில் அமர்ந்துள்ள மக்கள் வாக்காளர்கள் அதனை வழி நடத்த விசில் எனும் ஒரு சத்தத்தை நடத்துனர் கொடுத்தால் மட்டுமே அந்த பேருந்து தனது பயணத்தை முறையாக மேற்கொள்ளும் இது போன்ற பல கருத்துக்களை தமிழக வெற்றிக்காக தொண்டர்கள் கூறி வருகின்றனர் தமிழக அரசியலில் நிலவும் தேக்க நிலையை உடைத்து, புதியதொரு ஆட்டத்தை தொடங்கவே இந்த விசில் சின்னம் கிடைத்துள்ளதாக கொண்டாடுகின்றனர். விசில் சின்னத்தின் எளிமை, சாதாரண பாமர மக்களையும் எளிதில் சென்றடைந்துவிடும் என்பது தவெகவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக பார்க்கப்படுகிறது.
தவெகவினர் இணையதளங்களில் பகிர்ந்து வரும் “எங்க சின்னம் விசில் சின்னம்” என்ற வாசகங்கள் தற்போது ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விசில் சத்தம் அனைத்து தொகுதிகளிலும் பலமாக ஒலிக்கும் என்றும், அது எதிர்த்தரப்பினருக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யாமல், விஜய்யின் முகம் மற்றும் அவர் மீதான அன்பு மட்டுமே இந்த சின்னத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளதாக அவர்களுடைய தொண்டர்கள் கூறி வருகின்றனர்
இந்நிலையில் விசில் சின்னம் தவெகவிற்கு வழங்கப்பட்டதாக தகவல் வந்த சிறிது நேரத்தில் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் விழுப்புரம் மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் பொதுமக்களுக்கு விசில்களை வழங்கியும் இனிப்புகளை வழங்கிய விழுப்புரம் 4 முனை சந்திப்பில் தவெக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குஷி மோகன் தலைமையிலான குழுவினர் நடனமாடினர்.
