Headlines

கேரடாமட்டம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை – உடனடி நடவடிக்கை கோரிக்கை.

கேரடாமட்டம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை – உடனடி நடவடிக்கை கோரிக்கை

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கேரடா மட்டம் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. முக்கியமாக குடிநீர் பற்றாக்குறை கடுமையாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசு நிதியில் இருந்து சம்பந்தப்பட்ட துறை மூலம் இரண்டு கிணறுகள் தோண்டப்பட்டதாக கூறப்பட்டாலும், அதில் தண்ணீர் கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனுடன், சமீபத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. ஒப்பந்ததாரரின் அலட்சியம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், மாற்றுத் திறனாளிகளுக்காக அரசால் கட்டித் தரப்பட்ட வீடுகளுக்கும் போதிய குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மற்றும் இங்கே குடியிருக்கும் 450 குடும்பத்தார்களுக்கும் விளையாட்டு மைதானம் இல்லாதது ஒரு குறையாக மக்களிடையே கேள்விக்குறியாக உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொரடா மட்டம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *