நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக ஆலட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள ஆலட்டி கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு இயக்கத்தின் பொன்னான ஏழு கொள்கைகள் குறித்தும், கூட்டுறவு இயக்கத்தின் அடையாளமாக உள்ள ஏழு வண்ண வானவில் கொடி குறித்தும், கூட்டுறவு இலச்சினையான இணைந்த கரங்கள் குறித்தும் ஒவ்வொன்றுக்கன காரணங்கள் குறித்தும் விரிவாக எடுத்துத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம் செயலாட்சியர்/கூட்டுறவு சார்பதிவாளர் திரு. ரா. கௌரிசங்கர் முன்னிலை வகித்தார்.
தனது முன்னிலையுரையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் செயல்பாடுகள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் பிரச்சார பணிகள் குறித்தும் உறுப்பினர்களிடையே விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சங்க செயலாளர் திரு. மனோகரன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியின் மூலமாக வழங்கப்படும் பல்வேறு விதமான கடன்கள் குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாச்சியர் கூட்டுறவு சார்பதிவாளர் திருமதி. பிரியா சங்க பணியாளர்கள்,
சங்கத்தின் உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
