திருநெல்வேலி, ஜூலை.2:-
திருநெல்வேலி மாநகராட்சியின் 33-வது ஆணையாளராக பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரி டாக்டர் மோனிகா ராணா, கடந்த மாதம் [ஜூன்] 25-ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, நெல்லை மாநகராட்சியின் கீழுள்ள, 4 மண்டலப்பகுதிகளிலும் நடைபெற்று வரும், பல்வேறு வளர்ச்சிப்பணிகளை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில், இன்று [ஜூலை.2] காலை முதல் நண்பகல் வரை 3 முக்கிய மேம்பாட்டுப்பணிகளை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

முதலாவதாக பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள, வி.எம்.சத்திரம் பகுதியில் கட்டப்பட்டு வரும், கழிவு நீரேற்று நிலையத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். பணிகளை மிகவும் தரமானதாக, விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள திருமலைக்கொழுந்து புரம் மற்றும் மணப்படை வீடு ஆகிய 2 இடங்களிலும் உள்ள, மாநகராட்சியின் நீரேற்று நிலையங்களை பார்வையிட்டு, சுழற்சி முறையில் நீரேற்று நிலையங்களின் தொட்டிகளை சுத்தம் செய்திடவும், மாநகர மக்களுக்கு தங்கு தடங்கலின்றி குடிநீர் விநியோகிக்கவும் உத்தரவிட்டார்.பின்னர் தச்சநல்லூர் மணிடலத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை பார்வையிட்டார்.

அப்போது, அங்கிருந்த அதிகாரிகளிடமி பேசிய மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, “விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்!” என்று, அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி கவுன்சிலர் சங்கர் குமார், கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், உதவி ஆணையாளர்கள் ஜான்சன் தேவசகாயம், புரந்திரதாஸ், உதவி செயற்பொறியாளர் பேரின்பம் அம்மையார், உதவி பொறியாளர்கள் பட்டு ராஜன், நாகராஜன் உடனிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
