தமிழக முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சொத்து வரி வீட்டு வரி பால் விலை உயர்வு என தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களையும் பொதுமக்களை வஞ்சிக்கும் வகையில் வரி உயர்த்தி விடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி முன்பாக முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கையில் பதாகைகளுடன் தமிழக அரசு எதிராக கோஷங்கள் எழுப்பி சொத்து வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் பால் விளைவு உயர்வை ரத்து செய்ய வேண்டும் வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் வனத்துறை அமைச்சர் அதிமுக பொருளாளர் சீனிவாசன் கூறும் பொழுது
2026ல் அதிமுக ஆட்சி அமைக்கும் திமுக கூட்டணியில் அங்க வைக்கும் கட்சியினர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இணைவார்கள் இல்லாவிட்டாலும் தனிப்பெரும் தனிப்பட்ட முறையில் அதிமுக வெற்றி பெறுவோம்
அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது நிரந்தர எதிரியும் இல்லை தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி தெரியவரும்
தற்போது ஆறு அமாவாசை முடிந்துள்ளது இன்னும் பத்து அம்மாவாசை உள்ளது அதன் பிறகு தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் எடப்பாடி முதல்வராவார்
அண்ணா அண்ணா ஆரம்பித்த பொதுவான கட்சி கலைஞர் எம்ஜிஆரின் அரவணைப்பில் ஆதரவில் முதல்வராக ஆனவர் கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் துணை முதல்வராகவும் முதல்வராகவும் வந்தார் தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வந்துள்ளார் இவருக்கு பிறகு இன்பநதி துணை முதல்வராக வருவார்எனக் கூறினார்.
மாவட்ட நிருபர் : பாலசிந்தன்