Headlines

அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு… விமானப் படை துணை மார்ஷல் ஹர்ஜீத் சிங் சிதானா (VSM) பங்கேற்பு.

அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு... விமானப் படை துணை மார்ஷல் ஹர்ஜீத் சிங் சிதானா(VSM) பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு கேடட்களின் (64வது பிரீமியர்ஸ்) பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு நிகழ்ச்சி 28.01.2026 அன்று பள்ளி அணிவகுப்பு மைதானத்தில் (மேஜர் ஸ்ரீ ராம் அணிவகுப்பு சதுக்கம்) சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மொத்தம் 159 கேடட்ககள் பங்கேற்றனர். இதில் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த 93 கேடட்கள் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பில் பங்கேற்று, பள்ளியில் தாங்கள் பெற்ற 7 வருடப் பயிற்சியை நிறைவு செய்தனர்.

மேற்கண்ட அணிவகுப்பை விமானப் படை துணை மார்ஷல் ஹர்ஜீத் சிங் சிதானா, VSM விமானப் பணியாளர்களின் உதவித் தலைவர் (கல்வி) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பை ஆய்வு செய்தார். கேடட்கள் நேர்த்தியாக மற்றும் இராணுவ தரத்துடன் அணிவகுத்து பயிற்சியின் உயர்தரத்தை வெளிப்படுத்தினர்..

நிகழ்ச்சியில் உரையாற்றிய விமானப் படை துணை மார்ஷல் ஹர்ஜீத் சிங் சிதானா VSM அவர்கள், பாஸ்சிங் அவுட் ஆகும் கேடட்களை வாழ்த்தி, எதிர்கால தலைவர்களை உருவாக்கும் பள்ளியின் பங்களிப்பை பாராட்டினார். மேலும், நேர்மை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு போன்ற அடிப்படை மதிப்புகளை வாழ்க்கையில் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என கேடட்களுக்கு அறிவுறுத்தினார்.

2025-26 கல்வி ஆண்டிற்கான சிறந்த அணிக்கான காக்-ஹவுஸ் விருதை ‘சேர இல்லத்திர்க்கு தலைமை விருந்தினர் வழங்கினார். சிறந்த மாணவருக்கான விருதை ஸ்கூல் கேடட் கேப்டன் அபிஷேக் ப்ரஜாபதி பெற்றார். இந்த பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு நிகழ்ச்சி, கேப்டன் K. மணிகண்டன் (IN), முதல்வர் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பின் மூலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு லெப்டினன்ட் கர்னல் க. தீபு, நிர்வாக அதிகாரி, லெப்டினன்ட் கர்னல் கௌஷக் நந்தினி, துணை முதல்வர், மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் கேடட்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு, நேரில் கண்டுகளித்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *