உடுமலை நவம்பர் 02.
உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூபாய் இரண்டரை கோடி காய்கறிகள் விற்பனையானது.
உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் காய்கறிகள். கீரைகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதால் காய்கறி களின் விளையும் குறைவாக இருக்கும் இதன் காரணமாக உடுமலை நகரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து காய்களை வாங்கி செல்கின்றனர். இதனால் உழவர் சந்தை எந்த நேரமும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியாகவே காணப்படுகிறது.
அதன்படி கடந்த அக்டோபர் மாதம் சந்தைக்கு 6, லட்சத்து26, ஆயிரம் கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் வரத்து வந்துள்ளது. சந்தைக்கு 2ஆயிரத்து 261 விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்துள்ளனர். அதை ஒரு லட்சத்து 624 பொதுமக்கள் வாங்கிச் சென்றுள்ளனர். ரூபாய் 2 கோடியே 56 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை நடந்துள்ளது.
மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தற்போது புதிதாக அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது இதற்காக விவசாயிகள் தங்கள் பெயரில் உள்ள நிலத்தின் பட்டா .சிட்டா. அடங்கல் ,கிராம நிர்வாகி அதிகாரி சான்று ,ஆதார் ,மற்றும் குடும்ப அட்டை, நகல்கள் ஸ்டாம் சைஸ் புகைப்படம் 4ஆகிய வற்றுடன் உழவர் சந்தை அலுவலகத்தை அணுகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
