கோவை மாநகர் மாவட்டம், இராமநாதபுரம் பாரதிதாசன் நகர், ஆசிரியர் தேவராசன் அவர்களின் மருமகன் REV. பெஞ்சமின் மறைவு. மறைந்த அவர்களின் மகன் பிலிப்பைன்ஸ் நாட்டில் படித்து கொண்டிருந்தார், தந்தை மறைவுக்கு இந்தியா வருவதற்கு விசா தொடர்பான பிரச்சினை இருந்தது.
இராமநாதபுரம் பகுதி கழக செயலாளர் ப. பசுபதி , அமைச்சர் ஆவடி.சா.மு.நாசர் ( சிறுபான்மையினர் நலத்துறை) தொடர்பு கொண்டு உதவுமாறு கூறினார்.
அமைச்சர் உடனடியாக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தொடர்பு கொண்டு மாணவரை இந்தியா வர உதவி புரிந்தார். பகுதி கழக செயலாளர் ப. பசுபதி அவர்கள் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் இலக்கியன், விடுதலையன்பன், தட்சிணாமூர்த்தி, தமிழ்வாணன், அணில் குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத் குமார்
