Headlines

தென்காசியில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கலெக்டர் கமல் கிஷோர் பங்கேற்பு.

தென்காசியில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கலெக்டர் கமல் கிஷோர் பங்கேற்பு

தென்காசி மார்ச் 22
தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சார்பில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தென்காசி சௌந்தர்யா ஹோட்டல் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடந்தது.

மகளிர் திட்ட இயக்குனர் மதி இந்திரா பிரியதர்ஷினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பஜார் பள்ளிவாசல் இமாம் அப்துல் ஜப்பார் ஆலிம் கிரா அத் ஓதினார். தென்காசி மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.அப்துல் அஜீஸ் அனைவரையும் வரவேற்றார். ரவணசமுத்திரம் புகாரி மீரா சாகிப் தொகுத்து வழங்கினார்.

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க செயலாளர் ரவணசமுத்திரம் மொன்னா முகம்மது ஸலீம் சங்கம் குறித்து விளக்க உரையாற்றினார். பிரபல இசை அமைப்பாளர் ரமணிபரத்வாஜ், பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் ராமச்சந்திரன், தென்காசி புனிதமிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை போஸ்கோ குணசீலன், பொட்டல்புதூர் டாக்டர் அமீர்கான் ஆகியோர் ரமலான் நோன்பின் சிறப்புகள் பற்றி பேசினார்கள்.

நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் வி.டி.எஸ்.ஆர். முகம்மது இஸ்மாயில், தென்காசி ஹாஜி முஸ்தபா குரூப்ஸ் எஸ்.எம்.செய்யது சுலைமான் நகர் மன்ற தலைவர் ஆர். சாதிர், தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் எம்.ஷேக்அப்துல்லா, வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் எம். ஷேத்தாவூது, முஸ்லீம் லீக் தென்காசி நகரத் தலைவர் என்.எம்.அபூபக்கர், வர்த்தக அணி மாவட்ட தலைவர் ஹெட்ச். அகமது மீரான், மாநில விவசாய அணி செயலாளர் எம். முகம்மது அலி, கவுன்சிலர் நாகூர்மீரான், டாக்டர் வேதமூர்த்தி, டாக்டர்.தங்கப்பாண்டியன்,டாக்டர் சோமசுந்தரம் டாகடர் பாலசிங், மூத்தோர் மன்ற உறுப்பினர்கள், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஷேக் சலீம்,பிராமண நலசங்க தலைவர் நீலகண்டன், தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க இணை செயலாளர் பக்கீர் மைதீன், கவுரவ உறுப்பினர் முகைதீன், காசிம், மூத்த பத்திரிக்கையாளர் புளியங்குடி சாகுல் ஹமீது,கடையநல்லூர் நண்பர்கள் சங்கம்,ஜெஸ்டியன் சங்க உறுப்பினர்கள், மேலகரம் டவுன் பஞ்சயத்து துனை தலைவர் ஜீவா, எர்சத் மொன்னா , உசைத் , உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் அலி ஷேக் மன்சூர் நன்றி கூறினார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *