உடுமலை, அக்டோபர் 11-
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலைகளை கடந்து உள்ளது ஏழுமலையான் கோயில் இங்கு இன்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளுமானோர் வனப்பகுதியில் சுமார் ஏழு கிலோ மீட்டருக்கு தூரத்திற்கு பக்தி பாடல்களை பாடியாவாரே பாத யாத்திரையாக நடந்த வண்ணம் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஏழுமலையானுக்கு பிடித்த அவில் சர்க்கரை வைத்து வழிபாடு செய்தால் நீண்ட ஆயூள் உடன் ,நோய் நொடியின்றி இருக்கலாம் என்று முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் பல ஆண்டுகளாக ஏழுமலையான தரிசிக்க திரளான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.மேலும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை வனத்துறையினர் செய்து இருந்தனர்.

உடுமலை ,பொள்ளாச்சி பகுதியில் இருந்து சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கபட்டது
