பழனி அடிவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்வதாக பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தனஜெயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி தனஜெயன் தலைமையில் அடிவார காவல் நிலைய ஆய்வாளர் திரு ராஜா, சார்பு ஆய்வாளர் திரு பிரதாப் மற்றும் காவலர்கள் சக்திவேல், மற்றும் பெண் காவலர்கள் அந்த தனியார் தங்கும் விடுதியை சோதனை செய்ததில் அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதியானது. உடனடியாக அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படத்தில் சிறையில் அடைத்தனர்
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் : பழனி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தர். பழனி சின்ன வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சாமி கண்ணு.
