அக் 19; கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 38வது வார்டிற்கு உட்பட்ட கோட்டார் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞர் அணி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர், சிறுமியர்களுக்கான சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சுரேஷ் தலைமையில, லயன் முருகன் மற்றும் குட்டி மகேஷ் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கணேஷ், ரமேஷ், ராம்குமார், கனகராஜ், ஹரி, செல்வராஜ், அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் ஆறுமுக பிள்ளையார் கோவில் தெரு இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
ஆறுமுக பிள்ளையார் கோயில் தெரு இளைஞரணி மற்றும் பொதுமக்கள் விளையாட்டு போட்டிகளுக்கான பரிசு பொருட்களை உபயம் செய்த கோட்டார் பகுதியை சார்ந்த “மக்கள்” கந்தன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
