திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் ஜில்லா பகுதியில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளரின் பிரதிப் IPS அவர்களின் பலத்த பாதுகாப்புடன் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானா பகுதியில் இருந்து ஸ்ரீ செல்லமுத்து கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார் ஊர்வலம் முக்கிய பகுதிகளில் சென்று தாராபுரம் ரோட்டில் உள்ள கார்த்திகேயன் மகாலுக்கு எதிரே பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் பாடலுடன் இசை இசைத்து கொடியேற்றத்துடன் தொடங்கியது தலைமை விருந்தினராக இரா. கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார் .
முன்னிலை ஸ்ரீ. ஞானசேகரன். சிறப்புரை ஸ்ரீ. க. ஆறுமுகம் ஜி ப்ரச்சராக் தென் தமிழ்நாடு அவர்கள் உரையாற்றினார் இதில் அவர் கூறுகையில் 99வது ஆண்டு விஜயதசமி விழா, ஸ்ரீ அஹல்யாபாய் ஹோல்கர் 300வது ஆண்டு ஜெயந்தி விழா, சுப்ரமணி 140 வது ஆண்டு ஜெயந்தி விழாவை நினைவுறுத்தி சமூக மாற்றத்திற்கான ஐந்து படிநிலைகளையும் விவரித்து கூறினார் இறுதியாக சங்கப்பாடலுடன் இசை முழங்க கொடி இறக்கி கூட்டம் நிறைவு பெற்றது இதில் குப்புசாமி ஜி ஜில்லா சங்க சாலாக் ஆகியவுடன் சுயம்சேவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் : பாலசிந்தன்.