ஆக் 26, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு திமுக, பாஜக உள்ளிட்ட மூன்று கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களின் வார்டுகளில் குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்ட நிலையில், அதை சீரமைக்காமல் விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்த அவர்கள், உடனடி சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக கவுன்சிலர், “மக்கள் நலனை புறக்கணிக்கும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
