சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அடங்கிய மருத்துவ குழுவின் மூலம் மாத உதவி தொகை வேண்டி விண்ணப்பித்த 112 மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று மருத்துவ சான்றிதழ் ஆய்வு செய்து 112 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 1500 வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 18000 மதிப்பில் சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு குப்புசாமி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி சிறப்பு மருத்துவர் கள்சமூக பாதுகாப்பு திட்டம் வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி