நாகர்கோவில், டிசம்பர் 11:
அகில இந்திய BSNL மற்றும் DOT ஓய்வூதியர் சங்கத்தின் (AIBDPA) 5-வது அகில இந்திய மாநாடு, கோயம்புத்தூர் மாதம்பட்டியில் உள்ள லோட்டஸ் மஹாலில் வரும் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

மாநாட்டின் முதல் நாளான டிசம்பர் 17 அன்று காலை 8.00 மணிக்குக் கொடி மற்றும் ஜோதி பயணங்களுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9.00 மணிக்குக் கொடியேற்றத்தைத் தொடர்ந்து, 9.15 மணியளவில் தேசிய ஓய்வூதியர் தின நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஓய்வூதியர் பரிசீலனை, 8-வது ஊதியக் குழு (8th CPC TOR) மற்றும் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் (Labour Codes) ஆகியவற்றைக் கண்டித்து மாபெரும் கண்டன ஊர்வலமும், கண்டன உரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் BSNL அலுவலகம் முன்பு மாநாட்டின் சிறப்புகளை விவரிக்கும் வாயிற்கூட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாநாட்டின் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவத்தை விளக்கினார்கள்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் பாவலர் ரியாஸ்.
