கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாஸ்டர் பிளான் 2041 தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன் துணைத் தலைவர் ரங்கசாமி உதவி இணைச் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சேர்ந்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் ஜெயக்குமாரிடம் மனு ஒன்றை கழித்தினர் அந்த மனுவில் அவர்கள் கூறுகையில் நரசிம்மநாயக்கன்பாளையம், முதல் கோவில் பாளையம், வாகாரம் பாளையம், கருமத்தம்பட்டி, மற்றும் காரணம் பேட்டை,செலக் கரிசல்,ஒத்த கால் மண்டபம்,வழுக்கு பாறை,நவக்கரை வரை 81 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆறு வழி நெடுஞ்சாலை அமைத்து கோவை கிழக்கு புறவழிச் சாலை உருவாக்க அரசால் திட்டமிடப்பட்டு அந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது இத்திட்டம் கோவை 1531 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது 4 நகராட்சிகள் 21 டவுன் பஞ்சாயத்துக்கள் 66 பஞ்சாயத்து கலை உள்ளடக்கிய விரிவான திட்டம் செயல்படுத்த வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் யோசித்து கோவைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என இந்த கூட்டத்த ஆலோசித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது,
கோவை செய்தியாளர் : ஏழுமலை