தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இன்று(05.01.2026) நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் ”உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொர்ந்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள், எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 2321 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப, அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன் அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி அவர்கள், எம்.வி.எம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் லட்சுமி உட்பட உள்ளனர்.
பழனி நிருபர் : நா.ராஜாமணி.
