திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பால்,சந்தனம்,தயிர், இளநீர்,விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள்,பன்னீர்,பழரசம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விரதம் இருந்த பக்தர்கள்,உடுமலையின் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பொதுமக்கள்,பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளிய வள்ளி தெய்வானை முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தனர்.அதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து முருகப் பெருமானுக்கு கங்கணம் கழட்டப்பட்டு கந்த சஷ்டி விரத விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
உடுமலை நிருபர் : மணி