உடுமலையில் நூறாண்டு பழமை வாய்ந்த பிரசன்னவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பால்,சந்தனம்,தயிர், இளநீர்,விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள்,பன்னீர்,பழரசம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விரதம் இருந்த பக்தர்கள்,உடுமலையின்…