திருநெல்வேலி,நவ. 24:-
திருநெல்வலி கிழக்கு மாவட்டம் பணகுடியில், திருநெல்வேலி- திருவனந்தபரம் தேசிய நான்குவழி நெடுஞ்சாலையில், இன்று (நவம்பர். 24) மாலையில், விபத்து ஏற்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து, திருநெல்வேலியை நோக்கி வந்து கொண்டிருந்த கார், பணகுடி “நெருஞ்சி காலனி” அருகே, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த, சென்டர் மீடியனில் மோதி, அதனை உடைத்துக்கொண்டு, எதிர் திசையில் பாய்ந்தது.
இந்த விபத்து குறித்த செய்தி அறிந்தவுடன், பணகுடி காவல் உதவிஆய்வாளர் வினுகுமார் மற்றும் காவலர் சோமசுந்தரம் ஆகிய இருவரும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களை மீட்டு, காயம் எதுவுமில்லை! என்பதை உறுதிப்படுத்திய பின்னர், அவர்களை ஆசுவாசப்படுத்தினர். மழை காரணமாகவே, கார் எதிர் திசையில் பாய்ந்தது! என்பது, முதற்கட்ட விசாரணையின் போது, தெரிய வந்தது. இருப்பினும், இந்த விபத்து குறித்து, வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்
