Headlines

தேசிய அளவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதலிடம்.

தேசிய அளவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதலிடம்

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதியுடன் பல்வேறு சிறப்பான சிகிச்சை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.2022 ம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் NQAS எனும் தேசியதர சான்றினை பெற்றது.

2023 ம் ஆண்டு KAYAKALP எனப்படும் மருத்துவமனை மற்றும் சுற்றுப்புறம் தூய்மை பராமரிப்பினை ஆய்வு செய்து தேசிய அளவில் சான்று மற்றும் ஊக்க தொகை வழங்கப் படுகிறது, அதில் தென்காசி மருத்துவமனை மாநில அளவில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதல் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது.முதல் பரிசாக ஊக்கத்தொகை25 லட்சம் ரூபாய்தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்குமாநில அரசின் மூலம்பரிசாக வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் நல பிரிவில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் வசதிகளை ஆய்வு செய்து தேசிய அளவில் வழங்கப்படும் LAQSHYA,MUSQAN சான்றினை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக தேவைப்படும் அனைத்து விதமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் வசதிகளையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் தலைமையில் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ குழுவினர் செய்திருந்தனர். இந்த ஆய்வு 2024 நவம்பர் 25,26 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

ஆய்விற்கு மத்திய ஆய்வுக் குழுவினர் ஹரியானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இருந்து வந்திருந்தனர். அதன் முடிவுகள் நேற்று (6.1.2025) அறிவிக்கப்பட்டது,அதில் தென்காசி மருத்துவமனை தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளது.

மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறந்த மருத்துவமனையாக தேர்வு செய்யப்பட்ட,தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் அவர்களையும் , மருத்துவமனை பணியாளர்கள் அனைவரையும் வெகுவாக பாராட்டினர்.

மாவட்ட ஆட்சி தலைவர். ஏ.கே.கமல் கிஷோர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா தென்காசி அரசு மருத்துவமனையை பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக செயல்பட்ட அனைத்து துறை பணியாளர்களையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சிறப்பாக செயல்பட்டு வரும் தென்காசி அரசு மருத்துவமனை நிர்வாகத்தையும்,இணை இயக்குனர் மரு.பிரேமலதா அவர்களையும்,மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின்,உறைவிட மருத்துவர் செல்வபாலா,மகப்பேறு பிரிவு மருத்துவர் மரு.புனிதவதி,குழந்தைகள் நல பிரிவு மருத்துவர் மரு.கீதா ஆகியோர்களை, குற்றாலம் இந்திய மருத்துவ சங்கம் சார்பாக தலைவர் மரு.P.சுப்பிரமணியன், செயலாளர் மரு .ஸ்ரீ மணிகண்டன் மற்றும் முன்னாள் தலைவர்கள் மரு .பார்வதி சங்கர்,மரு.அப்துல் அஜீஸ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து,வாழ்த்து கூறி சிறப்பித்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *