Headlines

திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.12:-

இந்திய தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டு, இம்மாதம் (நவம்பர்) 4-ஆம் தேதி முதல், மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (SPECIAL INTENSIVE REVISION- SIR) தொடர்பாக, கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) நிரப்பி, வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) திரும்பக் கொடுப்பது சம்பந்தமாக, இன்று ( நவம்பர். 4) காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக, கூட்ட அரங்கில், திருநெல்வேலி “மாவட்ட ஆட்சித் தலைவர்” டாக்டர் இரா.சுகுமார், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், “ஆலோசனை” நடத்தினார்.

அப்போது, அரசியல் கட்சி பிரதிநிதிகள், திருத்தப்படிவம் பற்றி தங்களுடைய கருத்துக்களை, எடுத்துரைத்தனர். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ராணா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஷ் குப்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் பிரியா, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ராஜ செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பங்கேற்றிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *