மதுரை, சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு இல்ல மேலாளர் கிரேசியஸ் தலைமை தாங்கினார். செல்வபிரமா ஏஜென்சி நிறுவனர் செந்தில்குமார், முருகேச பாண்டியன், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான் மற்றும் நூருல்லாஹ் ஆகியோர் இணைந்து 30 தவழும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
மாவட்ட செயலாளர் ராவியத் பேகம் ஒருங்கிணைத்தார்.
நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி.
