திருநெல்வேலி,அக்.27:-
நெல்லை கொக்கிரகுளம் பகுதியில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், “மக்கள் குறைதீர்க்கும் நாள்” கூட்டம், இன்று (அகடோபர். 27) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து, மாவட்ட மக்களிடமிருந்து, “கோரிக்கை” மனுக்களை பெற்றார்.
இந்த கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளின் தன்மைகளுக்கேற்ப, மனுக்கள் பதிவு செய்யப்படுவதுடன், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், நேரில் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொதுப்பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை,மாவட்ட ஆடசித்தலைவரிடமே நேரடியாக அளிப்பதற்கான வசதிகளும், செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், தான் பெற்ற மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றைபரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, உததரவிட்டார்.
மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வந்துள்ள மனுக்கள் மீது, “தனிக்கவனம்” செலுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களிடம், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தின் போது, “உங்களுடன் ஸ்டாலின்!”திட்ட முகாமில், மனுக்கள் அளித்த பயனாளிகள் 5 பேருக்கு, “மாவட்ட வேளாண் பொறியியல் துறை” மூலமாக, “வேளாண்மையை இயந்திரமாக்கல்” துணை இயக்கத்திட்டத்தின் கீழ், “முன்னுரிமை” அடிப்படையில், 5 லட்சத்து, 69 ஆயிரத்து, 259 ரூபாய் மானியத்தில், 5 பவர் டிரில்லர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, சமூக பாதுகாப்புத்துறை தனித்துணை ஆட்சியர் ஜெயா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜ செல்வி, மாவட்ட வேளாண் பொறியியற்துறை உதவி செயற்பொறியாளர் ஆர். ராம விவேகானந்தன், உதவி பொறியாளர் இரா. சஞ்சய் கிருஷ்ணன் ஆகியோர் உட்பட, துறைசார்ந்த அலுவலர்கள் பலரும், இந்த கூட்டத்தில், கலந்து கொணடனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
