திருவனந்தபுரம் :
இந்தாண்டின் மிஸ் கேரளா பட்டத்தை தலைநகரில் பிறந்து வளர்ந்த ஸ்ரீநிதி சுரேஷ் வென்றுள்ளார். சட்ட மாணவியான ஸ்ரீநிதி, அறுமாதங்களுக்கு முன்புதான் எதிர்பாராத விதமாக ஃபேஷன் உலகில் காலடி வைத்தார். பங்கேற்ற இரண்டாவது அழகிப் போட்டியிலேயே வெற்றி பெற்ற சிறப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.
திருவனந்தபுரம் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த காலம் முதலே பேச்சுப் போட்டி, விவாதம், டிசைனிங், நடிப்பு, மிமிக்ரி போன்ற துறைகளில் ஸ்ரீநிதி முன்னிலையில் திகழ்ந்தார். தற்போது புனேயிலுள்ள சிம்பயோசிஸ் லா கல்லூரியின் இறுதியாண்டு சட்ட மாணவியாக உள்ளார். சிறுவயதிலிருந்தே ஃபேஷன் மற்றும் புதிய ட்ரெண்ட்ஸ் மீது ஆர்வம் காட்டிய ஸ்ரீநிதியை மாடலிங் உலகுக்கு வழிநடத்தியது அவரது தாயார் பிரியதர்ஷினியே.
அறுமாதங்களுக்கு முன்பு கொச்சியில் நடந்த போட்டியில் பங்கேற்க விண்ணப்பம் அனுப்பியது தாயாரே. ஆனால் பயிற்சிக்கிடையில் ஏற்பட்ட கால்வலி தடையாகியது. பின்னர்தான் ஸ்வயம்வரா சில்க்ஸ் இம்பிரசாரியோ மிஸ் கேரளா சில்வர் ஜூபிலி பதிப்புவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையில் பல பிராண்டுகளின் மாடலாகவும் பணியாற்றினார்.
புனேயில் கல்லூரியில் இருந்தபோது, குடும்ப நண்பரும் முன்னாள் மிஸ் இந்தியா குஜராத்துமான அமர்தீப் கௌர் மற்றும் தோழிகளும் பயிற்சியில் உதவி செய்தனர். 22 பேர் இறுதிப்போட்டிக்கு வந்தனர்.
மாடலிங், ராம்ப் வாக் என்பவற்றுக்கு அப்பால், தனிநபர் தன்மை மற்றும் அறிவுத்திறனை மதிப்பீடு செய்யும் பல்வேறு அமர்வுகளும் போட்டியின் பகுதியாக இருந்தது.
தலைநகரிலிருந்து போட்டியிட்ட ஸ்ரீநிதி சுரேஷ்க்கு, திருவனந்தபுரத்தின் வரலாறும் பாரம்பரியமும் குறித்த கேள்விகளே அதிகம் கேட்கப்பட்டன.
“ஒருவருக்குள்ளே இருக்கும் தன்னம்பிக்கையே அழகிப் போட்டியில் வெற்றியின் முக்கிய காரணம்,” என்கிறார் ஸ்ரீநிதி.
அவர் வஞ்சியூர் கோவளம் ஹவுஸில் வாழும், அரசியல் மற்றும் சமூகத் தலைவர் கோவளம் டி.என். சுரேஷ் மற்றும் பிரியதர்ஷினியின் மகளாவார்.
ரோஹன் கிருஷ்ணா, விவான் கிருஷ்ணா ஆகியோர் அவரது சகோதரர்கள்.
குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.
