செப் 05, உடுமலை –
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாதாந்திர வட்ட கிளைக் கூட்டம் உடுமலை பசுபதி வீதி மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டக்கிளைத் தலைவர் எஸ் ரகோத்தமன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர். சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம், 70 வயது முடிவடைந்த ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல், காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் ஆகிய பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடி விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எண் பது ஆண்டுகள் நிறைவு பெற்ற சங்கத்தின் தலைவர் எஸ். ரகோத்தமன், நவநீதம் ஆகியோர் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
பொள்ளாச்சி வாசன் ஐ கேர் நிறுவனத்தாரால் ஓய்வூதியர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்ற வுது. விழாவில் மாவட்டத் துணைத் தலைவர் ஆர். தங்கவேல், மாவட்டத் துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, உடுமலை வட்டக் கிளைத் துணைத் தலைவர்கள் தியாகராஜன், காளியப்பன், துணைச் செயலாளர்கள் ஆர் செல்வராஜ், ஆர் தண்டபாணி உள்ளிட்ட திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக பொருளாளர் ராமமூர்த்தி நன்றி நவில விழா இனிதே நிறைவு பெற்றது.
