வெள்ளி மேடு பேட்டை காவல் நிலையம் அதிரடி வாகன தணிக்கையில் சிக்கிய நபர்கள் போலீசாரின் கிலோ கஞ்சா பறிமுதல்.
6. பேர் கைது மாவட்ட கண்காணிப்பாளர் திரு. சரவணன்.IPS. அவர்களின் உத்தரவின் பெயரில் ரோஷனை காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி.தர்ணேஷ்வரி உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் திரு முரளி மற்றும் காவலர்கள் தலைமையின் வெள்ளி மேடு பேட்டை பேருந்து நிலையம் நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் ஏறுக்கு மாறாக பதில் கூறினார்கள்.
இவர்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்த காவல்துறையினர் அவர்கள் 6பேரையும் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இவர்கள் வந்தவாசி தாலுக்கா.சு காட்டேரி ராமு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் கவியரசு வயது.23. அய்யனார் மகன் சரத் பாபு என்பவரின் மகன் சதீஷ் விழுப்புரம் ஜி ஆர்.பி. தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் ரகுபதி வெளிமேடு பேட்டை மேட்டு தெருவை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மகன் குபேந்திரன் திண்டிவனம் கீழ் மலையனூர் பகுதியைச் சேர்ந்த வில்சன் என்பவரின் மகன் டிராவின் வயது 19. ஆகிய .6. நபர்களிடமிருந்து சுமார் 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு செல்போன் கைப்பற்றப்பட்டு நீதிமன்றம் வளாகத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் துரிதமாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்த போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் – அந்தோணிசாமி.
