கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட விரிசடி காலனியில் கடந்த சில நாட்களாக சாதிவெறி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் நடந்த கொலைவெறி தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஒருவர் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று மீண்டும் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ஜெயபால் என்ற இளஞ்சரை கண்ட அப்பகுதி மக்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் தெரிவித்துள்ளனர். எனினும் காவலர் அலட்சியமாக “கையில் கத்தியை சும்மா தானே வைத்திருந்தார், உங்களை குத்த ஒன்றும் செய்யவில்லையே” என்று கூறியதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் தங்களின் உயிர் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தென் மண்டல துணை செயலாளர் திருமாவேந்தன் தலைமையில், மகளிர் விடுதலை இயக்க மாநில துணை செயலாளர் கலைச்செல்வி முன்னிலையில் இன்று மதியம் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மருத்துவ தொண்டு மைய மாவட்ட அமைப்பாளர் ராஜா சிங், வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர்கள் வழ. ஜானி, வழ. கணேஷ், நிலவுரிமை மீட்பு மாவட்ட அமைப்பாளர் நாஞ்சில் துரை, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் முருகன், மகளிர் விடுதலை இயக்க மைய மாவட்ட செயலாளர் சோனியா, மாநகர மாவட்ட துணை செயலாளர் கார்த்திகா மற்றும் விரிசடி பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
