கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத்குமார்
79வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றிய பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன்
கோவை, ஆகஸ்ட் 15:
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை மாநகராட்சி 80வது வார்டில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் தேசியக் கொடியேற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் கோவை மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் திரு. பெ.மாரிசெல்வன் அவர்கள் கலந்து கொண்டு, கெம்பட்டி பகுதி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மற்றும் செல்வபுரம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தேசியக் கொடியை ஏற்றி மாணவ, மாணவியர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து மாணவர்களை திறம்படக் கல்வியில் சிறந்து விளங்கச் செய்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
மாநகராட்சி பள்ளிகள் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பொறுப்பேற்றதில் இருந்து மாநகராட்சி பள்ளிகள் மிகச் சிறப்பாகவும் அதிக சதவீதம் பெற்று உயர்ந்து வருவதால் பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர்.
மற்றும் அதை திறம்பட செய்து கொண்டிருக்கும் தலைமை ஆசிரியர் வகுப்பு ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், தமிழக முதல்வர் அறிவித்துள்ள கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
அவரது உரையில் கல்வி வளர்ச்சி மாணவர்களின் எதிர்காலத்தையும் சமூகத்தின் வளர்ச்சியையும் நிர்ணயிக்கக்கூடியது என அவர் வலியுறுத்தினார்.
விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு, யோகா, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில்:
பள்ளித் தலைமையாசிரியர்கள், த தேவ சகாயம் தனலட்சுமி, ஜான் பாத்திமா ராஜ் வகுப்பு ஆசிரியர்கள், விளையாட்டு ஆசிரியர்கள், பெற்றோர் சங்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஜெய்ஹிந்த் !
