Headlines

இஸ்ரேல்–அமெரிக்காவுக்கு எதிராக மஜக கண்டனம்! நாகர்கோவில் கோட்டாரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்…!

இஸ்ரேல்–அமெரிக்காவுக்கு எதிராக மஜக கண்டனம்! நாகர்கோவில் கோட்டாரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்...!

நாகர்கோவில், மார்ச் 3:

கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சி (மஜக) சார்பில் இஸ்ரேல்–அமெரிக்க அரசுகளுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அறிவுறுத்தலின்படி, நாகர்கோவில் கோட்டார் அப்துல் காதர் மருத்துவமனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

மேற்கு மாவட்ட செயலாளர் சாதிக் அலி முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் மாஹின் இப்ராகிம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அமீர்கான் மற்றும் இந்திய தேசிய லீக் மாவட்ட தலைவர் பைரோஸ் காஜா ஆகியோர் கோஷங்கள் எழுப்பினர்.

சிறப்பு உரைகள், பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் சு.ப உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும், எஸ்.டி.பி.ஐ நாகர்கோவில் மாநகர செயலாளர் முகமது அலி, இந்திய தேசிய லீக் மாவட்ட செயலாளர் பாசித், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான், தமுமுக மாவட்ட தலைவர் ஜெய்லானி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மேற்கு மாவட்ட பொருளாளர் நஸ்ருல் கரீம், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் அந்தோணி அலங்காரம், வணிகர் சங்க அணி செயலாளர் சம்மில், இளைஞரணி செயலாளர் யாசிர் அரஃபாத், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்துல்லா மாஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள், கோட்டார் கிளை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்ரேல்–அமெரிக்க அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *