அக் 02 கன்னியாகுமரி –
ஆட்டோ சங்க ஆயுத பூஜை விழா உற்சாகம் நாகர்கோவில் – கோட்டார் ரயிலடி திடலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் 20-ஆவது ஆண்டு ஆயுத பூஜை விழா நேற்று உற்சாகமாக நடைபெற்றது.
விழாவில் திராவிட முன்னேற்ற கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாநில துணைச் செயலாளரும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளருமான வழக்கறிஞர் மு. சிவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும் பி.எம்.சி. மோகன் (கிழக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர்), முருகபெருமாள், வட்ட கழக செயலாளர் ஏ.ஆர்.எம். பாரி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கொண்டாடிய இவ்விழா சமூக ஒற்றுமையின் வெளிப்பாடாக அமைந்தது.
பங்கேற்றோர் அனைவரும் ஆட்டோ சங்கத்தின் பணிகள் மற்றும் சமூக சேவையை பாராட்டினர்.
குமரி மாவட்ட நிருபர் – பாவலர் ரியாஸ்
