திருநெல்வேலி, ஜூன்.17:- நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில், இன்று [ஜூன்.17] மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, மேயர் கோ.ராம கிருஷ்ணன் தலைமை வகித்து, மாநகர மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
வண்ணார் பேட்டையில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, இடம் மாற்றம் செய்யக்கூடாது! தச்ச நல்லூர் பகுதியில்,கால்வாய் ஓடை வசதி, சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்! ஸ்ரீபுரம் பகுதியில் சீரான விநியோகம் செய்ய வேண்டும்! ரகுமத் நகரில் உடைந்த நிலையில் உள்ள பிரதான குடிநீர் விநியோகக்குழாயினை சரி செய்து தரவேண்டும்! மணிமூர்த்தீஸ் வரம் பகுதியில், வீட்டுவரி தீர்வை ரசீதில் பெயர் மாற்றம் செய்து தர வேண்டும்! 8-வது பகுதியில், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்! 38-வது வார்டு பகுதியில் பொதுப்பூங்கா, பாதாளச்சாக்கடை, தார்சாலை அமைத்துத்தர வேண்டும்! போன்ற கோரிக்கைகள், மேயரிடம் வழங்கப்பட்ட மனுக்களில் இடம் பெற்றிருந்தன.
இந்த நிகழ்வில், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, உதவி ஆணையர் ஜான்சன் தேவசகாயம் ஆகியோர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
