தென்காசி
தென்காசி மாவட்டம் தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் செங்கோட்டை பிரானூர் பார்டரில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை தமிழக ஆளுநர் ரவி தீர்மானங்களை நிறுத்தி வைத்தும் நிறைவேற்றாமல் தடுத்து வந்த செயலை உச்ச நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் நிறுத்தி வைத்தது தவறு என்றும் தமிழக ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் ஏதும் இல்லை என்றும் தமிழக அரசின் வழக்கினை ஏற்று நிறுத்தி வைத்த தீர்மானங்களை உச்ச நீதிமன்றமே நிறைவேற்றி அவற்றிற்கு செயல் வடிவம் கொடுத்தமைக்கு தமிழக அரசின் சார்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் தமிழக உயர்கல்வி துறையில் பல்கலைக்கழக வேந்தராக தமிழக ஆளுநருக்கு பதிலாக தமிழக முதலமைச்சரை நியமிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கியதை தென்காசி தெற்கு மாவட்ட திமுக தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையில் திமுகவினர் இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாட னர்.
தமிழ்நாடு முதல்வர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை குறித்து பேசிய மூத்த திமுக உறுப்பினர் மாநில கலை இலக்கிய பிரிவின் துணைத் தலைவர் கோமதிநாயகம் தமிழக அரசு கொண்டுவந்துள்ள அனைத்து தீர்மானங்களும் வெற்றி பெற்றது இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார் இந்நிகழ்ச்சியில் தென்காசி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா ஒன்றிய குழு உறுப்பினர் செல்வ விநாயகம் வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் செல்லத்துரை ஒன்றிய துணைச் செயலாளர் ஐயப்பன் கிளைச் செயலாளர் ராமையா ராமர் ஆர் கே செல்வம் முருகேசன் பண்பொழி முருகன் ஒன்றிய பிரதிநிதி வடிவேல் முருகன் பெரோஸ் கான் சாகுல் ஹமீது சாமி வல்லம் ஊராட்சி மன்ற உறுப்பினர் திவான் மைதீன் கொம்பமுத்து சந்திரன் தீன் ஜெய்லானி முகமது ஆசிக் முகமது அஜீஸ் சபீர் ரஹ்மான் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.