நாகர்கோவில், திச. 04
நமது சமூக நீதிப் பயணத்தை வலுப்படுத்தும் “அம்பேத்கர் வழியில் நாம்” என்ற கருத்தரங்கம் இன்று மாலை நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையும், மைய மாவட்ட செயலாளர் மேசியா முன்னிலையும் வகித்தனர்.
கருத்தரங்கத்தில் தென் மண்டல துணை செயலாளர் பகலவன், மேலடு பொறுப்பாளர் தமிழினேன், கன்னியாகுமரி தொகுதி செயலாளர் சிறுத்தை தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து ஒருங்கிணைந்த சிறுத்தைகளும் இதில் பங்கேற்று, அம்பேத்கர் பற்றி சமூகநீதி நோக்கில் தெளிவான புரிதலை பெற்றனர்.
அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, அவரது தத்துவங்கள் மற்றும் சமூக மாற்றப் பங்களிப்புகளை மிகத் தெளிவாகவும் தாக்கத்துடனும் விளக்கிக் கூறிய வெளிச்சம் ஷெரின் அவர்களின் உரை அனைவராலும் பாராட்டப்பட்டது.
கருத்தரங்கம் முழுமையாக தகவல் செறிவும் சிந்தனைத் தூண்டலுமாக அமைந்து, அனைத்து பங்கேற்பாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழக விடியல் குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.
