மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் கர்மவீரர் காமராஜர் படத்துக்கு பூக்களைத் தூவி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் ஷேக் மஸ்தான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். முதியோர் இல்ல பொறுப்பாளர் கிரேசியஸ் தலைமை வகித்தார். வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் காமராஜர் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக செய்த சேவைகள் குறித்து உரையாற்றினார். சமூக ஆர்வலர்கள் இல.அமுதன், ரமேஷ் குமார் மற்றும் இல்லத்தின் முதியோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
