Headlines

உடுமலை அருகே மலை கிராமத்தில் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வரும் காட்சிகள் தொடரும் அவலம் – பாதை அமைக்க வலியுறுத்தல்.

உடுமலை அருகேமலை கிராமத்தில் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வரும் தொடரும் அவலம் - பாதை அமைக்க வலியுறுத்தல்.

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாரு,ஆட்டுமலை, குலிப்பட்டி,குருமலை,மாவடப்பு, தளிஞ்சி,தளிஞ்சிவயல், கருமுட்டி உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.இவர்களுக்குக்கான அடிப்படை அத்தியாவசிய தேவைகள் அவ்வப்போது வனத்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் செய்து தரப்படுகிறது. ஆனால் கல்வி,பாதை,சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் இன்றளவும் முழுமை பெறவில்லை. இதனால் அவசர கால உதவிகளை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

உடுமலை அருகேமலை கிராமத்தில் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வரும் தொடரும் அவலம் - பாதை அமைக்க வலியுறுத்தல்.

அந்த வகையில் நேற்று குருமலையைச் சேர்ந்த இரண்டு மாத கர்ப்பிணி சுமதி என்பவருக்கு திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மலை வாழ் மக்கள் தொட்டில் கட்டி அவரை சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், எங்களது குடியிருப்புகளுக்கு பாதை வசதி என்பது இன்றளவும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. ஆனால் வனஉரிமைச் சட்டப்படி பாதை அமைப்பதற்கு பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அனுமதியும் கிடைத்து உள்ளது.ஆனால் அதை செயல்படுத்த முன்வரவில்லை. இதன் காரணமாக அவசரகால உதவிகள் என்பது உயிரை பணயம் வைத்து மற்றொரு உயிரை காக்கும் நிலையில் தான் உள்ளது.அந்த வகையில் சுமதி என்பவரை காலை 11 மணி முதல் தொட்டில் கட்டித் தூக்கி வந்து மாலை 3 மணிக்கு தான் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தோம். தற்போது வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் விரைவாக அடிவாரத்தை அடைவதில் சிக்கல்கள் நிலவுகிறது.உயிர் காக்கும் இந்த பொன்னான தருணம் பயண நேரத்தில் கழிவதால் அச்சமடைந்து அடைந்து வருகின்றோம்.எனவே மலைவாழ் குடியிருப்புகளுக்கு முறையான பாதை வசதியை விரைவாக ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

உடுமலை : நிருபர்: மணி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *