பருவ மழை தொடங்கி விட்டது கோட்டகுப்பம் எம் ஜி ரோடு ஆர்ச் எதிர்ப்புறம் பரகத் நகர் செல்லும் பாதை கோழி கடை அருகில் பள்ளம் விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டது அதன் பக்கத்திலும் பள்ளம் விழுந்து உள்ளது நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும்.
பருவமழை காலம் தொடங்கி விட்டது இன்னும் ரோடு பள்ளம் அதிகமாக விழும்15வது வார்டு உட்பட்ட பகுதியாகும தார் சாலைகள் பழுதடைந்து உள்ளது.
இதுவரை இன்னும் சீரமைக்கப்படவில்லைதற்போது மழை காலம் தொடங்கிவிட்டது ரோடு போடுகிறோம் என்று சொல்லி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது இதுவரைக்கும் இன்னும் சீரமைக்கப்படவில்லைபரகத் நகர் முதலாவது குறுக்கு தெரு சாக்கடை கழிவுநீர்தேங்கிய நிலையில் தான் இருந்து கொண்டிருக்கின்றது.
இவையெல்லாம் மிகவும் பொதுமக்களுக்கு சிரமமாக இருந்து கொண்டு வருகின்றது கோட்டகுப்பம் நகராட்சி நிர்வாகம் மழைக்காலம் இன்னும் அதிகமாக ஆகுவதற்குள் சீரமைத்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கு நற்சான்று வழங்குவதே உள்ளாட்சி அமைப்புகளில் செய்யும் செயல்பாடுகள் தான் கோட்டகுப்பம் நகராட்சி பொறுத்த வரையில் மக்கள் பணியில் தொடர்ந்து தோல்வி அடைந்த வரும் நிலையிலேயே உள்ளது நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு கோட்டகுப்பம் நகராட்சி பகுதிகளை ஆய்வு செய்து மழைக்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்தவும்
cbs Bhaskar – Villupuram district Reporter
