திருநெல்வேலி,நவ.16:- இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்து, பிரபல திரைப்பட நடிகர் விஜய்யின், தவெக கட்சியினர்.
இன்று (நவம்பர்.16) காலையில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக “கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தவெக கட்சியின் மாநில துணை பொதுசசெயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான SRI DHARAN தலைமை வகித்தார்.
கொள்கைப்பரப்பு இணை செயலாளர் கேத்தரின், மாநில வழக்கறிஞர்கள் பிரிவு துண செயலாளர் அருண் ஆகியோர், முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட செயலாளர்கள் தெற்கு ராஜ கோபால்,கிழக்கு ஜாகீர் உசேன், வடக்கு மாவட்ட இணை செயலாளர் மரிய ஜான் உட்பட, மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ஆண், பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இந்த “கண்டன” ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், ஒன்றிய அரசுக்கும் எதிராக “கோஷங்கள்” போட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.
