மதுரை பெரியார் பஸ் நிலையம் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அருகில் யூசி பள்ளியில் நடைபெற்ற வெற்றி அறக்கட்டளை நிலவன் டிவி இணைந்து வழங்கிய நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்டார் பிரண்ட்ஸ்அறக்கட்டளை நிறுவனர், டி.குருசாமி தலைமையில் நடைபெற்றது. இடை காட்டூர் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகர் முன்னிலை வகித்தார் மற்றும் கட்சி பிரதிநிதிகள், காவல்துறை ஆய்வாளர்கள் ,வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், கலந்து கொண்டு சமூக ஆர்வலர்களுக்கான விருது மக்கள் நலப்பணி விருது மற்றும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கான விருது களையும் மேலும் நலிவடைந்தவர்களுக்கு தையல் மெஷின் சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காது கேளாதவருக்கு மெஷின், அரிசி, வேஷ்டி ,சேலை ,மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுகள் உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சின்னத்தம்பி நத்தம் மதுரை வீரன் பால்மாரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இறுதியில் வெற்றி அறக்கட்டளையின் நிறுவனர் ரமேஷ் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் பங்கு பெற்று பயனடைந்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

