Headlines

“ தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை நிகழ்வு…

“ தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை நிகழ்வு...

நேற்று(24.02.26)கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திரு,துரை.செந்தமிழ் செல்வன் தலைமையில்,நடைபெற்ற “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரை நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர், Dr.கனிமொழி என்.வி.என்.சோமு அவர்கள், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஐயா மகாத்மா காந்தி, நஞ்சுண்டாபுரம் பகுதியில் பேரறிஞர் அண்ணா, சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐயா தியாகி.என்.ஜி. ராமசாமி, ஒண்டிப்புதூர் பகுதியில் கர்மவீரர் காமராஜர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள் திரு,எஸ். எம். சாமி, திரு,ம. நாகராஜ், திரு,சிங்கை சிவா, திரு,நஞ்சை செல்வராஜ் வட்டக்கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், கழக
தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத் குமார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *